×

2019-ம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு: வில்லியம் ஜி.கெலின், சர் பீட்டர் ராட்கிளிஃப், கிரெக் செமன்சா ஆகிய 3 பேருக்கு பரிசு பகிர்ந்தளிப்பு

டெல்லி: 2019-ம் ஆண்டு மருத்துவ கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர்  ராட்கிளிஃப், கிரேக் எல்.செமன்ஸா ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடலில் உள்ள செல்கள் எப்படி பிராணவாயு அளவுக்கு ஏற்ப தகவமைத்து கொள்கின்றன என்பதை கண்டறிந்ததற்கு நோபல் பரிசு. மேலும் செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கும், ஆக்சிஜன் அளவுக்குமான தொடர்பை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மூவரின் கண்டுபிடிப்புகள் மூலம் ரத்த சோகை, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை எதிர்க்க புதிய உத்திகளை கண்டுபிடிக்க முடியும். நோபல் பரிசு தொகையான ரூ.6.45 கோடியை 3 பேரும் சமமாக பகிர்ந்து கொள்கின்றனர்.

நாளை இயற்பியல் துறைக்கும், நாளை மறுதினம் வேதியியல் துறைக்கும் பரிசுகள் அறிவிக்கப்படும். வரும் வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான பரிசு அறிவிக்கப்படாததால் இந்த ஆண்டு இரண்டு பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன.

Tags : Peter Radcliffe ,Greg Semanza ,Department of Medicine ,Three William G. Kelin ,Announcements , Department of Medicine, Nobel Prize
× RELATED எழும்பூர் குழந்தைகள் நல...